பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் - - 87.

வேட்டுப் பயில்முத்து

வேலப்பன் செய்விருத்தில் ஏட்டுத் தயிர் என் -

றெவர் சொன்ளார்?-நாட்டமுடள் கண்டோம் விழியால்

கரத்தாற் பிசைக்தளத்தோடு உண்டோம் இலையோ உவந்து:

நாட்டமுடன்-விருப்பத்துடன், அ ன த் தோ டுசோற்றோடு. -

ஈ, இலை

அப்போது இலையில் 好消 மொய்த்தது. முத்து வேலப்பக் கவுண்டர், 'ஒரு மாதத்துக்குமுன் இங்கே ஒரு மகாநாடு. நடந்தது. ஜனக்கூட்டம் அதிகமாக இருந்தது. அது: முதல் அதிகம். இலையில் ஈ மொய்க்கிறது' என்றார்.

உடனே இவர் ஒரு கற்பனையைப் பாவில் உதிர்த்தார்: "இலன் என்னும் எவ்வம் உரையாமை, ஈதல்-குலனுடை யான் கண்ணே உள' என்று திருவள்ளுவர் கூறுகிறார். நல்லொழுக்கமும் குடிப்பிறப்பும் உடையவனிடம், பிறர் ஒருவர்பால் சென்று நான் ஒன்றும் இல்லாதவன் என்று சொல்லி இரவாமல் இருப்பதும், எல்லாருக்கும் கொடுப் பதும் ஆகிய செயல்கள் உள்ளனவாகும் என்பது பொருள். முத்து வேலப்பக் கவுண்டர் எந்தச் சமயத்திலும் யாரிடத் திலும் ஈ என்று கேட்கமாட்டார். எவர் வந்து எதைக் கேட். டாலும் இலை என்று சொல்லமாட்டார். இப்படி ஈ என்றும் இலை என்றும் சொல்லாதவராகிய் கவுண்டர், இப்போது ஈ இலையில் மொய்த்தவுடன் ஈ, இலை என்று சொல்வி விட்டார். இவ்வாறு சொல்லி அத்தக் கருத்தை ஒரு பாடலில் இணைத்துச் சொன்னார். - - • ,