பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கி.வா.ஜ.வின் செய்யுளில் சிலேடை

பாவம் துடைக்கின்ற பாரியூர்க் காளி

பதமலர்க்கே , ஆவ லுடன்அன்பு செய்முத்து வேலப்பன்

. அன்றொடின்றும் சீவன் துறக்கினும் ஈஎன் றிலை என்று

செப்பறியான், - ஈவங் திலையில் இருத்தலும், ஈஇலை

என்றனனே.

ஆலமும் பனையும்

பாரியூர்க் காளி கோயிலுக்கு எதிரில் வாய்க்கால் ஓடுகிறது. நீர்வளம் நிலவளம் நிறைந்த பகுதி அது. கோயிலுக்கு முன்னே ஓர் அழகான ஆலமரம். அதன் நடுவில் நட்டு வைத்தாற்போல் ஒரு பனைமரம் முளைத் திருந்தது. சுற்றிலும் ஆலமரக் கிளைகள் ஒழுங்காக விரிந்து நிற்க, நட்ட நடுவில் அந்தப் பனைமரம் காட்சி அளித்தது.

காளி கோயிலுக்கு அருகில் சிவபெருமான் கோயில் இருக்கிறது. அங்குள்ள பெருமானுக்கு அமர விடங்கர் என்று பெயர். பழங்காலத்தில் ஒரு புலவர் அப்பெருமானைப் பற்றி ஒரு குறவஞ்சி பாடியிருக்கிறார். அதற்கு அமர விடங்கர் குறவஞ்சி என்று பெயர்.

இவர் காளியைத் தரிசித்தார்; அமர விடங்கரையும் தரிசித்து வணங்கினார். பனைமரம் நட்ட நடுவில் முளைத் திருந்த ஆலமரத்தையும் பார்த்தார். அமர விடங்கருக்கும் அந்த ஆலமரத்துக்கும் ஒரு சிலேடை பாடினார். -

கோலும் அமர விடங்கர் தம் கோயில்

அகத்தும்முகில் போலும் திருமேனி கொள்காளி கோயிற் புறத்தினிலும்