பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 89

ஆல மடக்கிய அப்பனை யாங்கள்கண்,

டங்கருமை சால உணர்ந்தனம், பாரியூர் என்னும்

தலத்தினிலே. 鸾喙

முகில் போலும் திருமேனி-ம்ேகத்தைப் போன்ற கரிய திருமேனியை, அமர விடங்கருக்கு : ஆலம் மடக்கிய அப்பனை யாங்கள் கண்டம் கருமை சால உணர்ந்தனம்ஆலகாலவிடத்தைப் பிறரை அழிக்காமல் மடக்கி உண்ட தந்தையாகிய பரமசிவனை அடியேங்கள் அவனுடைய் கண்டமானது கரிய நிறம் நிரம்பியிருப்பதனால், இனம் கண்டு கொண்டோம். ஆலமரத்துக்கு : ஆலம் அடக்கிய அப் பனை யாங்கள் கண்டு அங்கு அருமை சால உணர்ந் தனம்-ஆலமரம் தனக்குள் அடக்கிய அந்தப் பனை மரத்தை நாங்கள். கண்டு அங்கே அந்த அருமையை நன்றாக உணர்ந்தோம். - -

வீரன் சின்னான்

'வேறு ஒரு முறை இவர் கோபிசெட்டிபாளையம் சென்ற போது தேவராஜ மகால் என்ற மாளிகையில் தங்கி யிருந்தார். சத்தியாக்கிரக வீரரும் தேசத் தொண்டரு மாகிய திரு. ஜி. எஸ். லக்ஷ்மணன் இவருக்கு வேண்டிய உப்காரம் செய்தார். அன்று இவர் முடி திருத்திக்கொள்ள வேண்டியிருந்தது. சின்னான் என்ற முடி விளைஞன் வந்து ஏற்பன செய்தான். அவனுக்கு இவர் கூலி கொடுக்கப் போனபோது அவன் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்றான். உடனே, 'அப்படியானால் நான் ஒரு பாட்டுத் தருகிறேன்; வாங்கிக்கொள்' என்று ஒரு வெண்பா பாடினார். சின்னான் என்னும் வீரன் கையில் கத்தி எடுத்தான். நான், அஞ்சி நடுங்கி இன்னது செய்தேன்' என்று தொனிக்கும் வகையில் அந்தப் பாடல் அமைந் திருக்கிறது. * . . -

磚一6