பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கி.வா.ஜ.வின் செய்யுளில் சிலேடை

தலைவணங்கி வாய்மூடித் தாடையினைக் காட்டி அலைகுடுமி கையில் அளித்தேன்-கலைவளங்கள் மெத்தவளர் கோபிநகர் விறுசின்னான் தன்கையில் கத்தி வினை எடுக்கக் கண்டு.

கத்தி எடுப்பவன் இவருடைய நண்பருள் ஒருவராகிய திரு. கி. ரங்க ராஜன் குமபகோணத்திலிருந்து சென்னைக்கு வந்து இவர் வீட்டில் தங்கினார். (அவர் அமரராகிவிட்டார்.) ஒரு நாள் ஒரு சிறிய கல்யாணம் விசாரிக்க இவர் போனபோது ரங்க ராஜருடன் சென்றார். -

அங்கே காலையில் மாப்பிள்ளைக்கு ஒரு மு டி. விளைஞன் முடிகளைந்தான். மாப்பிள்ளை நீராடிப் புத்தாடை புனைந்து ம ைன யி ல் அ ம ர் ந் தா ர். அப்போது அந்த முடிதிருத்துவோன் தன் கையில் நாகசுரம் எடுத்து ஊதத் தொடங்கினான். சென்னையில் இந்தக் காட்சி அரிதன்று. ஆனால் நண்பருக்கு இது ஆச்சரியமாக, இருந்தது. அவர் சோழ நாட்டுக்காரர் அல்லவா? சின்னக் கல்யாணமாகையால் அவனுடைய வாத்தியமே போது மென்று வைத்திருந்தார்கள். -

ரங்கராஜன் இவரிடம், "இது என்ன, பொருத்தம் இல்லாமல் இருக்கிறதே!” என்றார். 'இந்தப் பக்கத்தில் இது வழக்கந்தான். இவன் இரண்டு சமயத்திலும் ஒரு காரியந்தானே செய்கிறான்?’ என்றார் இவர். அது எப்படி?” என்று கேட்டார் நண்பர். இவர் ஒரு வெண் பாவில் விடை சொன்னார். -

சென்னை நகரில் சிறந்தகலி யாணத்தில் முன்னே சவரம் முயன்று செய்தான்; பின்.அவனே உத்தியின்றி நாயனத்தை ஊதினான்; ஈரிடத்தும் கத்தி எடுப்பவனே காண். கத்தி எடுப்பவன் . சவரம் செய்யக் கத்தியை எடுப் பவன், இசையைப் பாடாமல் வெறும் கத்தலாகக் கத்து. கிறவன். - -