பக்கம்:கீதைப்பாட்டு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான யோகம் 99 யத்ருச்சா-லாப-லந்துஸ்டோ த்வந்த்வாதீதோ விமத்லர: லம: லித்தாவலித்தெள ச. க்ருத்வாபி ந நிபத்த்யதே 22. எடுத்துமுய லாதெது கிடைக்கினு முவப்போன் இரட்டைக டொடற்கரியன் மற்சரமி லாதோள் கிடைத்தல் கிடையாமையினு மொப்பவுள னானோன் கிட்டி வினை செய்துமொரு கட்டுறுத லில்லை. 184 தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷ முறுவோனாகி, இருமை களைக் கடந்து. பொறாமையற்றவனாய், வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை. கதலங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞானாவஸ்த்தித சேதல: யஜ்ஞாயாசரத: கர்ம ஸ்மக்ரம் ப்ரவிலியதே 23. ஞானநிலை நின்றமன னோடுதொடர் பற்றே யாவையும் விடுத்தவனும் வேள்வியின் பொருட்டுத் தானொழுகு வானுடைய தொல்வினை முற்றும் சாருத விலாதபடி சாவடையு மாதோ. 185 பற்றுதலகன்றான். விடுதலை கொண்டான். ஞானத்தில் மதி நிலைக்கப்பெற்றான். வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப்போய் விடுகிறது. ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம-ஹவிர் ப்ரஹ்மாக்னெள ப்ரஹ்மனா ஹல்தம் ப்ரஹ்மை வ தேன கந்தவ்யம் ப்ரஹ்மகர்ம-ஸ்மாதினா 24. பிரமக் கருவிப் பிரமச் சருவைப் பிரமத் தழலிற் பிரமத் திடலாய்ப் பிரமங் கருமம் மெனவெண் ணவனவற் பிரமம் மதுவே பெறல்தக் கதரோ, 185 பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஒமம் பண்ணுவோன். பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/100&oldid=799642" இலிருந்து மீள்விக்கப்பட்டது