பக்கம்:கீதைப்பாட்டு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கீதைப் பாட்டு செய்கையில் செயலின்மையையும், செயலின்மையில் செய்கையையும் எவன் காணுகிறானோ. அவனே மனிதரில் அறிவுடையோன் அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான். யஸ்ய ஸர்வே ஸ்மாரம்ப்பா: காமலங்கல்ப-வர்ஜிதா: ஜ்ஞானாக்னி-தக்த-கர்மாணம் தமாஹ:ைபண்டிதம் புதா: 19. எவனதெல் லாவினை யின்றொடக்கங்களும் இச்சையோ டேபலத் தெண்ணமற் றுள்ளவத் தவவுனர்ந்த வனையே ஞானியர் ஞானமென் தழலினால் வெந்துபோம் வினையனென் றோதுவார். E எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந் தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம். அவனை ஞானிகள் அறிவுடையோ னென்கிறார்கள். த்யக்த்வா கர்ம பலாலங்கம் நித்யத்ருப்தோ நிராச்ரய: கர்மண்-யபிரவ்ருத்தோSபி நைவ கிஞ்சித் கரோதி ல: 20. எவன்கன்ம பலங்களி லாசை விடுத் தென்றும்முள சீவனி லுள்ள மகிழ்ந் தெவைபேறு மெனானவன் கன்ம முனைந் தியலும் மெனினுந் செய்கிலா னெதையும். IS2 கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடை யோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக் கையிலும் செயலற்றவனாவான். நிராசீர்-யதசித்தாத்மா த்யக்த-லர்வ-பரிக்ரஹ: சாரீரம் கேவலம் கர்ம குர்வன்-னப்னோதி கில்பிஷம் 21. எல்லாவபி மானமும் விட்டுநசை யில்லாம லடக்கிய சிந்தைமணம் வல்லா னுடலே டியைபா யவினை =-. மட்டும்புரி தந்து பவம் மடையான். 183 ஆசையற்ாவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்க.ை வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து -ெடிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/99&oldid=799981" இலிருந்து மீள்விக்கப்பட்டது