பக்கம்:கீதைப்பாட்டு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர்வத்வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்ய ச மூர்த்த்ன்-யாதா-யாத்மன: ப்ரான-மாஸ்த்திதோயோகதாரணாம் 12. துளைய னைத்தையு நனிய டக்கிநெஞ் சுள்ளி ருக்குமென் னிடன்மனன் னிறீஇ உளம சைப்பிலா யோக தாரனத் துச்சி யிற்றன்பி ராணன் வைத்தபின், 322 எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனதை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதிபெற்று. ஒமித்-யோகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாமனு ஸ்மரன் ய:ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாங்கதிம் 13. பிரமப் பெயரைக் கொளு மோமெனவே பெறுமொற் றையெழுத் தையுரைத் தெனையே கருதுற் றுமெய் விட் டெவன்செல் பவுனோ கதியுத் தமமற் றவனெய் துவனால், 3.23 “ஓம்” என்ற பிரம்ம எழுத்தை - ஒன்றையே ஜபித்துக் கொண்டு என் னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகின்றான். அனன்யசேதா: ஸ்ததம் யோ மாம் ஸ்மரதி நித்யச: தஸ்யாஹம் ஸுலப பார்த்த நித்ய-யுக்தஸ்ய யோகின: 14. எப்போதினு நித்தமும் வேறெதையும் எண்னா மனனா லெனையெண் ணினனாய் எப்போது மெனைத்தழி யுள்ள வவ்யோ கிக்கியா னெளியன் பிருதைக் கினியோய். 3.24 நித்திய யோகத் திசைந்து, பிறிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன். பார்த்தா. மாமுபேத்ய புனர்ஜன்ம து:க்காலய-மசாச்வதம் நாப்னுவந்தி மஹாத்மான ஸ்ம்லித்திம் பரமாங்கதா: 15. எனையடைந்துள பெரும னத்தின ரினிய சித்தியி னுயர்வையெய் தினரிடர்க்கிட னாய்நிலைப்பதில் செனன முற்றிலர் திருமவும். 3.25 என்னை யடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள் மறுபடி நிலையற்றதும், துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறுபிறப்பை யடையமாட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/145&oldid=799691" இலிருந்து மீள்விக்கப்பட்டது