பக்கம்:கீதைப்பாட்டு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (பதினொன்றாம் அத்தியாயம்) விசுவருப தரிசன யோகம் (*~ த இயற்பொருள் விளக் s) பதினொன்றினில் விசயன் பரமேசன் படிகான அதிதிப்பிய விழிதந்த துரைத்தவ் விதமவனை எதிர்கானு வதற்கும் மடைதற்கும் மிவனேது முதிர்பத்திமை யொன்றேயென மொழிகிற்பது மாதோ. இங்ங்னம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேந்திரங்களை அளிக்கிறார். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுபருபத்தைக் கண்டு மகிழ்கிறான். விசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுபருபத்தில் வையக முழுதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜூனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான். பிறகு அர்ச்சுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தமது விசுவரூபத்தைச் சுருக்கிக்கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு சக்கரங்களையுமேந்தி நின்று, தமது உண்மையான சொரூபத்தைக் காணவும் தம்மைப்பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்க மாதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு உபதேக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/175&oldid=799724" இலிருந்து மீள்விக்கப்பட்டது