பக்கம்:கீதைப்பாட்டு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி யோகம் 2O1 பகைவனிடத்தும். நண்பனிடத்தும். மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் சமப்பட்டான். பற்று விட்டான். துல்ய-நிந்தா-ஸ்துதிர்-மெளனி லந்துவிடிடோயேன-கேனசித் அனிகேத: ஸ்த்திரமதிர்-ப்பக்திமனன் மே ப்ரியோ நர: 19. புகழும் பழியுஞ் சமமெண் ணினன்வாய் புகலா தெதுவோர் பொருளின் னிடனும் மகிழ்வான் றிரபுத்திய னில்விழையா மனிதன்னென தன்புள னென் பிரியன். 488 புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மெளனி, யாது வரினும் அதில் மகிழ்ச்சி யுறுவான். குறியற்றான். ஸ்திர புத்தியுடையான். இத்தகைய பக்தன் எனக் கினியவன். யே து தர்ம்யாம்ருத-மிதம் யதோக்தம் பர்யுபாஸ்தே ச்ரத்ததானா மத்பரமா பக்தாஸ்-தேsதீவ மே ப்ரியன: 20. அறநிலைப்படு மமிழ்தினை நிகரிதை அறைமுறைப்படி முதலேன் எனைஏவர் உறுசிரத்தையி னனிவழிபடுதலை உடைய பத்தரென் மிகுவிழைவினரவர். 489 இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர். நம்பிக்கையுடையோர் என்னை முதலாகக் கொண்டோர். அத்தகைய பக்தர் எனக்கு மிகவு மினியர். பன்னிரண்டாம் அத்தியாயம் நிறைவேறியது. ( கீதைப் பொருட்டெ Tಖ5) பத்திமையின் மேம்பா டுபாசனையின் மேன்மையிதிற் சத்தியிலார்க் கான்மநிலை சாருமுறை-மெத் ததனுக் கங்கமா வேண்டுவன வன்பன்க னார்வமிகல் துங்கவீ ராறு சொலும், (75)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/202&oldid=799755" இலிருந்து மீள்விக்கப்பட்டது