பக்கம்:கீதைப்பாட்டு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (பதின்மூன்றாம் அத்தியாயம்) கேஷத்ர கூே,த்ரஜ்ஞ விபாக யோகம் (ca. த இயற்பொருள் ars) பதின்மூன் றுதனிடனா மெயின்பண்புந் தனையெய்தற் கிதுதா னெறியென லோகுயிரின் சோதனை பந்தம் அதனேதிது வெனவோர் வதுமான்மா வறிவுடனே மதிகூர்தர வுணர்விப்பது மன்னும் மிவனம்மா. இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஜந்து பூதங்களும் பதினோரு புலன்களும் அடங்கியது. இத்தேகத்தின் சேர்க்கையால் தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில் விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன. கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவுக்கு இவை ஒன்றும் இல்லை. அத்தகைய நிலையைப் பெற வேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விடவேணும். ஆசாரியனைப் பணிந்து அவனருளால் துாய்மை பெற்றுப் புலன்களை அடக்க வேண்டும். வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு இறப்பு கிடையாது. தேக சம்பந்தமே பிறப்பெனவும், அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும். அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது. இவ்வித ஆத்ம சொருபத்தைக் கர்ம யோகத்தினாலும் ஞானயோகத்தினாலும் பெறலாம். தாவர ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/203&oldid=799756" இலிருந்து மீள்விக்கப்பட்டது