பக்கம்:கீதைப்பாட்டு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. கீதைப் பாட்டு பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்விக மெனப்படும். லத்கார-மான-பூஜார்த்தந் தபோ தம்ப்பேன சைவ யத் க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜலஞ் சல-மத்த்ருவம் 18. தவமேது வெகுமான மிசைபூசை யெண்ணி டம்பத்தி னாலே செயப்பட்ட தஃதோ இவனே சலித்துக் கெடத் தக்க தாகும் இயம்பப்படும் ராசசம் மென்று மாதோ. 514 மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காகச் செய்வதுமாகிய தவம் ராஜசமெனப்படும் அஃது நிலையற்றது. உறுதியற்றது. மூட-க்ராஹே-ணாத்மனோ யத் பீடயா க்ரியதே தப: பரஸ்யோத்லாதனார்த்தம் வா தத்-தாமல-முதாஹ்ருதம் 19. மூடர் பிடிவாதத் தாலொரு தனக்கு மொய்த்திடர் விளைப்பதா லயலவற்குப் பீடைசெய வெண்ணி யாதுதவ மேவும் பேசலுறுமஃது தாமச மெனத்தான். 515 மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமச மெனப்படும். தாதவ்ய-மிதி யத்தானம் தீயதேsனுபகாரினே தேசே காலே ச பாத்ரே ச தத்தானம் லாத்விகம் ஸ்ம்ருதம் 20. கால மிடந்தகுதி சாலுந் திறத்ததினுப காரம் புரிந்தில னுக்கீதல் தகும் மெனவே மேலெது தான முதவிற்றது சத்துவமே மிக்க தெனக்கருதப் பட்டுள தம்மவரோ 515 கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்விக மென்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/245&oldid=799811" இலிருந்து மீள்விக்கப்பட்டது