பக்கம்:கீதைப்பாட்டு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரத்தாத்ரய விபாக யோகம் 245 யத் து ப்ரத்யுபகாரார்த்தம் பலமுத்திச்ய வா புன: தீயதே ச பரிக்.லிஷ்டம் தத்தானம் ராஜலம் ஸ்ம்ருதம் 21. எதிருதவு தற்கும் பயனடைவ தைத்தன் னிதயமிசை யேவைத் தெனினு நலதின்றி எதுதருத லுற்ற ததுகொடைமை தன்னை எணல்தகு மிராசச குணமுள தென்றே. 617 கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜச மென்பர். அதேசகாலே யத்தான-மபாத்ரேப்ப்யச்ச தீயதே அலத்க்ருத-மவஜ்ஞாதம் தத்தாமல-முதாஹ்ருதம் 22. தேசமில் தேசத்தினுங் காலமில் காலத்தினுஞ் செம்மை யிலாதவர்க்கு நன்மை யிலாதபடி ஏசவ மானமுட னேது கொடுத்ததஃ தேய்ந்தது தாமச மென்றாய்ந்து சொலப்படுமே. 618, தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதார்க்குச் செய்யப்படுவதும். மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமச னெப்படும். ஓம்-தத்-ஸ்திதி நிர்த்தேசோ ப்ரஹ்மனஸ்-த்ரிவித ஸ்ம்ருத: ப்ராஹ்மனாஸ்-தேன. வேதாச்ச யஜ்ஞாச்ச விஹிதா புரா 23. ஒம் தத்சத் தெனமூ விதமாகும் உரைகண் மறையோ டெனலா யினவால் ஆமந் தணரும் மறை வேள் விகளும் அவையான முனமே செயலா யவரோ. 619 “ஓம் தத் ஸத்’ என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக குறிப்பதென்பர். அதனால், முன்பு பிராமணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன. தஸ்மா-தோமித்-யுதாஹ்ருத்ய யஜ்ஞ தான-தப:க்ரியா: ப்ரவர்த்தந்தே விதானோக்தா லததம் ப்ரஹ்ம வாதினாம் 24. அதனான மறையோது வர்தம் விதியின் அறையப் படும்வேள்வி தவங்கொடைகள் முதலாகிய கன்மமு மோமெனவே மொழிசெய் தெதுபோ தினுமே நிகழும். G20 ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் 'ஓம்' என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/246&oldid=799813" இலிருந்து மீள்விக்கப்பட்டது