பக்கம்:கீதைப்பாட்டு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கீதைப் பாட்டு வாலாம்லி ஜீர்னானி யதா விஹாய நவானி க்ருஹ்னாதி நரோSபராணி ததா சரீராணி விஹாய ஜர்னான் - யன்யாணி லம்யாதி நவானி தேஹீ 22. கந்தை யாயதுகில் விட்டுவேறு புதி தெந்தவாறு நரன்கைக் கொள்வன் அந்த வாறுகிழ மெய்யை விட்டு நவ மாயவே றடைவ தாமுயிர். 5-7 நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு, மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான். நைநஞ் சிந்தந்தி சஸ்த்ரானி நைநன் தஹதி பாவக: ந சைனங் க்லேதயந்த்யாபோ ந சோஷயதி மாருத: 23. இவனைப் படைகள் சிதையச் செயலில் லிவனத் தழலோ சுடுதற் கிலையால் இவனைப் புனலு நனையச் செயலில் லிலையே வளியும் முலரச் செயலே. 70 இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா: தீ எரிக்காது, நீர் இவனை நனைக்காது. காற்று உலர்த்தாது. அச்சேத்யோயS-மதாஹ்யோsய-மக்லேத்யோ Sசோஷ்ய ஏவ ச நித்ய:லர்வகத: ஸ்த்தானு-ரசலோsயம் லநாநன: 24. இவன்வெட் டுறாதவ னனையப்ப டாதவன் எரிதற்கொ னானிவ னுலரற்கு மேயிலன் எவையிற்று மேவினன் சலனத்தை மேவலன் இவனித்தன் றாணுவொ டொருமற் றநாதியே. 77 பிளத்தற் கரியவன் எரித்தற்கும். நனைத்த்ற்கும். உலர்த்துதற்கும் அரியவன் நித்தியன் எங்கும் நிறைந்தவன். உறுதியுடையான். அசையாதான். என்றும் இருப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/63&oldid=799942" இலிருந்து மீள்விக்கப்பட்டது