பக்கம்:கீதைப்பாட்டு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கீதைப் பாட்டு நகர்மணா-மனாரம்பாந்-நைஷ்கர்ம்யம் புருஷோsச்னுதே ந ச லந்ந்யலனாதேவ லித்திம் லமதிகச்சதி 4. செயன்மு டித்துவிடு பவன்ம னத்தகைமை செயல்தொ டங்கலில தாலெய்தான் செயல்தொ டங்கிவிட லானு மேபுருடன் சித்தி யெனபதடை கிற்கிலான். 723 தொழில்களைத் தொடங்காமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான். ந ஹி கச்சித் கூடிணமபி ஜாது திஷ்ட்டத்-யகர்மக்ருத் கார்யதே ஹ்யவச: கர்ம ஸ்ர்வ:ப்ரக்ருதிஜைர்-குணை 5. ஒருவ னொருக்காலும் வினையை யியற்றாமல் ஒருசில் கணத்தேனு முளனிலை மற்றேனோ ஒருபக டிப்பாலாங் குணனுட னுற்றன்றோ உறுவய மற்றியாரும் வினைசெய் திருப்பாரால். 12+ எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றியிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குண்ங்களே எல்லா உயிர்களையும் அவசர மாகத் தொழில் புரிவிக்கின்றன. கர்மேந்த்ரியாணி லம்யம்ய ய ஆஸ்தே மனலா ஸ்மரன் இந்த்ரியார்த்தான் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே 6. எவன்வினைசெ யும்பொறிக டமைநனியொ டுக்கிமன தினில்விடய முற்று நினைவாய் இவனுளன வன்பெரிது மறிவழிம னத்தனொழு கியது.பொய் யெனப்ப டுவனால், 12.5 கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால், இந்திரிய விஷயங் களை மனதால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யொழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான். யஸ்த்விந்த்ரியாணி மனலா நியம்யாரபதேsர்ஜூன கர்மேந்த்ரியை கர்மயோக-மலக்த: ஸ விசிஷ்யதே 7. பொறிதாம் மனதா னியமித் தெவனோ புரிபற் றெதுவும் மிலனாய் வினைசெய் பொறியால் வினையோ கயர்வா னவனே புகழ்தக் கவனா மிகவர்ச் சுனனே. 72 to

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/81&oldid=799962" இலிருந்து மீள்விக்கப்பட்டது