பக்கம்:கீதைப்பாட்டு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ம யோகம் 81 அர்ஜூனா, எவன் இந்திரியங்களை மனதால் கட்டுப்படுத்திக் கொண்டு. கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன். நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மன: சரீரயாத்ராபி ச தே ந ப்ரலித்த்யே-தகர்மன: 8. விடவொ னாதவினை புரிக நீவினையை விடுவ தின்வினைமை மேலெனோ உடலு லாவுவது முள்ள தில்லைவினை யொன்று மேசெயலி லுன்கனே. I27 விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டு செலுத்துதல்கூட உனக்கியலாமல் போய்விடும். யஜ்ஞார்த்தாத் கர்மனோsன்யத்ர லோகோsயம் கர்மபந்தன: ததர்த்தம் கர்ம கெளந்தேய முக்தலங்க: லமாசர 9. வேள்விப் பொருட்டுள்ள வினையன்றி வேறே வினைசெய்யி லிம்மண் வினைக்கட் டுனுந்தான் வேள்விப் பொருட்டுள்ள வினைபற்று விட்டே மிகவுஞ்செய் வாய்குந்தி மகவென்று வந்தோய். 12S வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு. ஸஹ யஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: அனேன ப்ரஸ்விஷ்யத்வ-மேஷவோsஸ்த்விஷ்ட காமதுக் 10. உயிர்கட் கிறைமுனம் வேள்வியி னோடும் உயிரைத் தரல்செய்வதிவ் வேள்வியினாலே உயர்வுற் றுமைவளர் விக்க விதுங்கட் குனுமிச் சைகடர வாகுக வென்றான். __ 129 முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க் குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான். இதனால் பல்குவீர்கள். நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/82&oldid=799963" இலிருந்து மீள்விக்கப்பட்டது