பக்கம்:கீதைப்பாட்டு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ம யோகம் 83 அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது. மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது. கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரலமுத்பவம் தஸ்மாத் ஸ்ர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்ட்டிதம் 15. உடலான் வினையோ வுளதா மெனவோர் உடலும் முயிரா னுளதா மதனால் இடனா முழுதும் மடையும் முடலும் எதுபோ தினும்வேள் வியினா னிலையும். 13-1 செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது. ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது. ஏவம் ப்ரவர்த்திதஞ் சக்ரம் நானுவர்த்தயதீஹ ய: அகாயு-ரிந்த்ரியாராமோ மோகம் பார்த்த ஸ ஜீவதி 16. எவனிஷ் விதமே சுழலா ழியினை இவனே தொடரா னவனா யுளெலாம் பவமே வியவன் பொறிபைம் பொழில்போல் பவன்வாழ் வது வீண் பிருதைக் கினியோய். 73.5 இங்ங்னம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாபவாழ்க்கை யுடையோன் புலன்களிலே களித்தான் பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம். யஸ்த்வாத்ம-ரதிரேவ ஸ்யா-தாத்ம-த்ருப்தச்ச மானவ: ஆத்மன்யேவ ச லந்துஷ்டஸ் தஸ்ய கார்யம் ந வித்யதே 17. மனிதன் னெவனோ வுயிரே விழைவன் மகிழ்பன் னுயிருள் ளுயிரின் னிறைவோன் எனவா குவனன் னவனுக் கொருகா ரியமுஞ் செயவேண் டியதில் லையரோ. I Eri தன்னிலே தான் இன்புறுவான், தன்னிலே தான் திருப்தியடைவான். தன்னிலே தான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/84&oldid=799965" இலிருந்து மீள்விக்கப்பட்டது