பக்கம்:கீதைப்பாட்டு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ம யோகம் 85 எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ, அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள். ந மே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷ லோகேஷ கிஞ்சன நா நவாப்த-மவாப்தல்யம் வர்த்த ஏவ ச கர்மணி 22. திரிலோகு முளனாமெனக் கொன்று செயவேண் டியதில்லை யிதுகாறு மெய்தாம லினிமேல் வரவாகு வனவில்லை யெனினும் வினைக்கண் மருவிக்கொ டேநிற்பல் பிருதைக்கு மகனே. 141 பார்த்தா. மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலில்தான் இயங்குகிறேன். யதிஹ்யஹம் ந வர்த்தேயம் ஜாது கர்மண்-யதந்த்ரித: மம வர்த்மானுவர்த்தந்தே மனுஷ்யா: பார்த்த ஸர்வச: 23. மடியி லாமெலெப் பொழுதும் யான்வினை மருவி லேனெனிற் பிருதை சேயெலாப் படியி னாலுமா னிடர்க ளாயுளார் படர்வ ராவர்யான் படர்நெ றிப்படி 7-12 நான் சோம்பரில்லாமல் எப்போதும் தொழில் செய்து கொண்டி ராவிடின், பார்த்தா. எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுவார்கள். உத்ஸிதேயு-ரிமே லோகா ந சூர்யாம் கர்ம சேதஹம் லங்கரஸ்ய ச கர்த்தாஸ்யா-முபஹன்யா-மிமா: ப்ரஜா: 24. யானேகன் மத்தைச் செயேனே லுலோகர் இவரோவி நாசத்தை யேயெய்து வாரால் யானே கலப்பைச் செய் தேனாகு வேன்மற் றிச்சிவர் தம்மைக் கெடுத்தேனு மாவேன். |-|3 நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள் குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன். இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/86&oldid=799967" இலிருந்து மீள்விக்கப்பட்டது