பக்கம்:கீதைப்பாட்டு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கீதைப் பாட்டு என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தை யுடையோராய்ப் பொறாமை யின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள். யேத்வேத-தப்யல9யந்தோ நானுதிஷ்ட்டந்தி மே மதம் ஸர்வஜ்ஞானவிமூடான்ஸ்-தான் வித்தி நஸ்டா-னசேதல: 32. எவரென் மதமீ தொழுகா துளரோ எவர்தாமு மசூயை நிறைந்தவரோ அவரெவ் வறிவின் கணுமூ டர்கெடு வார் நன்மன மில்லவ ரென்றறிவாய். 151 என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ, எவ்வித ஞானமு மில்லாத அம்மூடர்களை நாசமடைந் தோராகவே தெரிந்துகொள். லத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்-ஜ்ஞானவானபி ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹ கிம் கரிஷ்யதி 33. தெரிதந் தவனுந் தனதா யபய திக்கொத் தபடிப் புரிகிற் பனரோ தருபல் லுயிர்தம் மியல்பே தொடருந் தடையா யுளதென் செயவல் லதுவே. 152 ஞானமுடையவன் கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது. இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷெள வ்யவஸ்த்திதெள தயோர்-ந வசமாகச்சேத் தெள ஹ்யஸ்ய பரிபந்திநெள 34. ஒவ்வொரு பொறிக்குமுரி மைப்பலனி லாசை யோடுளம்வெ றுத்தலுள வாகுமவை தாமே இவ்வுயிரி னுக்குறுப கைத்தொகையி தாலே யிவற்றின்வய மாதலையெய் தாதொழிக மாதோ. 15.3 இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புக்கள் ஏற்ப ட்டிருக்கின்றன. இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/89&oldid=799970" இலிருந்து மீள்விக்கப்பட்டது