பக்கம்:கீதைப்பாட்டு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ம யோகம் 89 ச்ரேயான் ஸ்வதர்மோவிகுண: பரதர்மாத் ஸ்வனுஷ்ட்டிதாத் ஸ்வதர்மே நிதனம் ச்ரேய: பரதர்மோ பயாவஹ: 35. நன்றொழுக லுற்றுவிடு மந்தியதன் மத்தி னன்மைகுறை யுந்தனது தன்மமிக மேலாம் தன்றரும நின்றுமர ணம்பெறுதன் மேலச் சந்தருவ தாகுமய லானுடைய தன்மம். 154 நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும், குணமற்ற தெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பர தர்மம் பயத்துக்கிடமானது. அர்ஜுன உவாச: அத கேன ப்ரயுக்தோளுயம் பாபஞ் சரதி பூருஷ: அனிச்சன்னபி வார்ஷ்னேய பலாதிவ நியோஜித: 36. ஆவற் படுகில் லனுமாய்ப் பினரிவ் வான்மா வெதனா னனியே வுதல்பெற் றேவப் படுவா னைநிகர்த் துவலிந் தேபா வமியற் றுவன்யா தவனே. 155 அர்ஜூனன் சொல்லுகிறான் : விருஷ்ணி குலத் தோன்றலே. மனிதனுக்கு இச்சையில்லாதபோதும் அவனை வலியக்கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது? பு பகவானுவாச : காம எவடி க்ரோத ஏவடி ரஜோ குண ஸமுத்பவ: மஹாசனோ மஹாபாப்மா வித்த்யேந-மிஹ வைரினம் 37. இதுகாமம் ரசோ குனனால் விளைவ கியதா முனவோ மிகவுண்பதுவாம் இதுகோப மிகைப்படு பாவமுள திதனைப் பகையென் றெணுவா யிவனே. 155 பரீ பகவான் சொல்லுகிறான் : இஃது விருப்பமும் சினமும் ரஜோ குணத்திற் பிறப்பது பேரழிவு செய்வது பெரும்பாவம் இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/90&oldid=799972" இலிருந்து மீள்விக்கப்பட்டது