பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i04 கீதை காட்டும் பாதை ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில் களை இறைவன் செய்வதாகக் கூறலாம். சிவ பெருமான் பிறப்பு இல்லாதவன் என்றும், மிக்க அருள் உடையவன் என்றும், இறப்பு இல்லாத வன் என்றும், எல்லார்க்கும் இன்பம் அருள்பவன் என்றும் திருமூலர் குறிப்பிடுவார். மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க அந்தமும் ஆதியும் அகன்ஹோன் காண்க பந்தமும் விடும் உடைப்போன் காண்க கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க இவ்வாறு திருவாசகம் இறைவன் இயல்பைக் கூறும். எல்லாம் செய வல்லதெய்வம் எங்கும் நின்ற தெய்வம் என்னுயிரில் கலத்தெனக்கே இன்ப நல்கும் தெய்வம் நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம் என்று வள்ளலார் தெய்வத்தை வடித்துக் காட்டுவார். உலகின் முதல் தலைவன் மிக்க அறிவுடையவன் இதயத் தாமரையில் உள்ளவன் விருப்பு வெறுப்பத்தோன் நன்மை தீமை யில்லாதவன்