பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ைேத காட்டும் பாதை வேதம், உபநிஷத், வேதாந்தம், கீதை, புராணம், சாஸ்திரம், மனுநீதி என்ற இப்படிப்பட்ட நூல்கள் அனைத்துமே நம் நாட்டில் பெரும்பாலான மக்களை அடிமைகளாகவும், உரிமையற்று உழைக்கும் சாதியினராகவும் நடத்துவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் துணை நிற்கும் பொல்லாங்கு களாக இருக்கின்றன என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். போர் வேண்டாம் என்ற அர்ச்சுனனைப் போருக்கு அணியப்படுத்தும் முயற்சியாக கீதைக் கருத்துக்களைக் கண்ணன் வழங்குகின்றான். அர்ச்சுனனைக் காரணமாக வைத்து அவன் கூறும் கருத்துக்கள், மக்களை அடிமைப்படுத்தும் கருத்துக்களாக அமைகின்றன. ஆத்ம வாதம் தொடங்கி மூட நம்பிக்கைகளைப் புகுத்தி கர்மயோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகியவைகளைத் தொடர்ந்து, வருண பேதத்தை வலியுறுத்தி, ஒவ்வொரு முறையும் உயிர்ப்பலி யாகங்களைச் செய்ய வேண்டிய இன்றியமையாமையைக் கூறி, மோட்சம், நரகம், பரமபதம் ஆகியவற்றை அடைவது வரை