பக்கம்:குஞ்சாலாடு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமாரி கனகாம்பரம் 45. யான மன்மதக் கலேயில் அனுபவ பூர்வமான பயிற்சிகள் பெற்று இன். ஞானம் வளர்த்து வந்த குமாரி - மான வன் கூட்டு மூளைத் திட்டத்தின் பயனுக. இருவரும் வேறு நகரம் சென்று மணம்புரிந்து வாழ்வில் மறுமலர்ச்சி ஏற். படுத்திவிடுவது; அதன் மூலம் லட்சியப்பாதையில் கெரிஞ்சி முட்களாகவும் ஊசிக் கற்களாகவும் தறுதலைத் தனமாகத் தலைநீட்டி தொல்லே கொடுக்கும் ஊராரின் நம்பிக்கையில் மண்ணைப் போடுவது என்ற திட்டம் பிறந்தது. சாதாரண மாகவே இன்பம் அனுபவித்த அவர்களுக்கு இந்தயோசனை மிகமிக ருசிகரமாயிருந்தது. பாயசத்தில் சர்க்கரையும் சேமியாவும் அதிகமானது போக கற்கண்டும். கிஸ்மிஸ் பழமும் கூடச் சேர்ந்து இனித்ததுபோல! அதன் பயனுக ஒரு நாள் ஒடுகின்ற ரயிலில் உற்சாகம் மிக்க ஒரு ஜேர்டி இன்பப் பிரயாணிகள் அதிகமாயினர். குமாரி கனகாம்பரம் கனவு கண்டாள். அவளது இன் பக் கனவுகளின் அஸ்திவாரமாக அவனையே நம்பியிருந் தாள். அந்த மயக்க கிலேயில் அவள் அவனேச் சந்தேகிப் பது எங்ங்னம்: ருசித்த பிறகு தானே ஹோட்டலில் காப்பி என்று கிடைப்பது காப்பி எனும் பெயர் பெற்ற ஏதோ ஒரு திரவ பதசர்த்தமே தவிர, (கிட்டத் தட்ட தண்ணியே தவிர!) வேறு சுவையான காப்பியல்ல என்று புரிந்துகொள்ளமுடிகிறது! வாழ்க்கை அனுபவமும் அப் படித்தான். அனுபவித்த பிறகு தான் உண்மை உதய மாகிறது. அனுபவச் சூடு வேறு ரகமான பொறிகளைச் சித றும் கிலேக்குக் கொதிப்புற்றும் விடுகிறது. அவளுக்கு நேர்ந்தது அதுதான். வண்ணக் கோலங்கள் திகழும் வான வளையத்தைத் தொடும் கனவுகளென இனிமையாய் நெளிந்து வளைந்து தனிகடம் பயிலும் பட்டங்கள் போல. இனிய கினேவு களாக நீளும் இன்பத் திட்டங்கள் இட்டு எதிர்காலம் பற்றி எண்ணி மகிழ்ந்தவளே ஏங்கவிட்டு ஓடி மறைந்தான் அவன். ஊர்க்காரர்கள் நம்பிக்கையிலே மண் போட்ட அவள் கம்பிக்கையையே மண்ணுக்கிவிட்டான் மாணவன்! காதல், ஒருயிர், கண்ணே, மணியே, காதே மூக்கே, குஞ்சாலாடே. கஞ்சாப் புகையே என்ற ரீதியில் காகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/51&oldid=800315" இலிருந்து மீள்விக்கப்பட்டது