பக்கம்:குஞ்சாலாடு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமாரி கனகாம்பரம் 47 அழுகை ஆழுகையாக வந்தது. வேருென்றும் ஓடவில்லை. சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கூட எழவில்லே. படுக்கையில் விழுந்து கண்ணிர் வடித்துக்கொண்டே கிடக் தாள். கொதிக்கும் ரோல் பச்சை மா இட்டலியாக வெந்து விடுவது போல், கினேவுக் கொதிப்பால் அவளது பச்சிளம் உள்ளம் வேதனையாக வெந்தது. என்ன செய்வது ? இனி எங்கே போவது? - அது தான் அவள் பிரச்னை. ஊர் புதிது. அங்கு யாரையும் அவளுக்குத் தெரியாது அவள் துணிந்த வயுவதிதான். என்ருலும் பெண். வெளி யூர்களுக்குச் சென்றவள் அல்ல. அதிலும் இந்த எக்கச் சக்கமான கிலே அவளே வாட்டி வதக்கியது. அவள் அழுது கொண்டே கிடந்தாள். நேரம் ஓடியது. மத்தியானம் கழிந்து மாலையும் வக் தது. அவள் உள்ளம் கூட வரண்டுவிட்டது. இனி என்ன செய்வது? ஊருக்குப் போகலாமா ? சொந்த ஊருக்கே திரும்பிவிடலாமா? - இக் கினேவு முளைவிட்டு வேகமாய் வளர்ந்து அப்படிச் செய்வதே நல்லது என்ற முடிவு விள்ே யும்படி செய்தது. நல்ல வேளே! அவள் கையில் கொஞ்சம் பணம் இருந்தது. அவ்விஷயத்தில் அவள் புத்திசாலித்தன. மாக நடந்துகொண்டாள் தான் சேர்த்து வைத்தி பணத்தை எடுத்துவர மறக்காத அவள் அதை அவனி டம் கொடுக்கவிரும்பாமல் தானே வைத்துக்கொண்டது சமயத்துக்கு உதவியது. ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு ஏதோ கொஞ்சம் டிபன் சாப்பிட்டு விட்டுக் கிளம்பிய அவளுக்கு பயம்தான் அதிகரித்தது, இருட்டும் நேரம். தனியாக ஸ்டே ஷன் போய் சேர வேண்டுமே! சோகமும் கவலையும் பய மும் குழப்பும் உள்ளத்துடன் நடந்த கனகாவுக்கு கடை எவ்வவில்லை. தளர்வுடன் அசைந்தாள். அவள் எதிரே காலி வண்டியாக ஒரு ஜட்கா வந்தது. ஜட்காவாலா அவ ளேயே கவனித்து வந்தான். அவளேயே நெருங்கியதும் என்னம்மா. எங்கே போகனும்?' என்று கேட்டான். அவள் சிமிர்ந்து பார்த்தாள். அந்த வண்டிக்காரன் தோம் றம் அவளுக்கு பயத்தையே தந்தது. அவள் பேசாமல் கடக் தாள். அவன் விடாமல் என்னம்மா, வண்டி வேண்ட்ாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/53&oldid=800319" இலிருந்து மீள்விக்கப்பட்டது