பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2

சட்டப்பேரவை கூடும்போது, பேரவை கூடும் நாள், காலம், இடம் ஆகியவை பற்றிய விளக்கம், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்க்கும் அறிவிக்க வேண்டியது இன்றியமையாதது. அத்தகைய அறிவிப்பு, தனி ஒரு உறுப்பினர்க்கு அனுப்பப் பெறவில்லையாயினும், அந்நிலையில் கூட்டப் பெறும் சட்டபேரவைக் கூட்டம் செல்லுபடி ஆகாத கூட்டம் ஆகும். அக்கூட்டத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியும் நிறைவேற்றப்பட்ட எந்தத் தீர்மானமும் செல்லுபடி ஆகாதன ஆகும் என்பதைத் தமிழ்நாடு சட்டப் பேரவை விதிகளை ஆதாரம் காட்டி முன்பே விளக்கி இருந்தேன்.

மேற்படி என் முடிவை உறுதி செய்யும் வலுவான ஆதாரங்கள் சிலவும் இருக்கின்றன; அவற்றை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருவது என் கடமை ஆகும்.

நாடாளுமன்ற நடைமுறை மரபுகளுக்கு வழிகாட்டி, நூலாகக் கொள்ளப்படுவது, நாடாளுமன்றத்தில் செயலாளர்களாகப் பல்லாண்டுகாலம் பணிபுரிந்து அத்துறையில் முதிர்ந்த அறிவு பெற்றவர்களாகிய திருவாளர்கள் எம். என். கவுல் என்பாரும், திருவாளர் எல்.எல். ஷக்தர் என்பாரும் எழுதிய "பாராளுமன்றத்தில் பழக்க வழக்கமும் நடைமுறை ஒழுங்கும்” (Practice and procedure of parliament) என்ற நூலாகும்.

அதில் பின்வரும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.