பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

தீப்பட்ட குழந்தை நெருப்புக்கு அஞ்சும். -இங்கிலாந்து

நாவை அடக்கப் பழக்கிய குழந்தை விரைவிலே பேசக் - கற்றுக் கொள்ளும். -( , , )

குழந்தை பேசுவதெல்லாம் அடுப்பங்கரையில் கற்றவை.

-( , , )

தந்தை அழுவதைவிட, குழந்தை அழுவது மேல். -( , , )

குழந்தைகளும் கோழிக் குஞ்சுகளும் எப்பொழுதும் தின்று கொண்டே யிருக்கவேண்டும். -( , , )

பகுத்தறிவு உறங்கும் காலம் குழந்தைப் பருவம். - -ரூஸோ

செல்லக் குழந்தைக்குப் பல பெயர்கள் இருக்கும்.

- டென்மார்க்

குழந்தைகளும் குடிகாரர்களும் உண்மையே பேசுவர்.

-( , , )

அடுத்த வீட்டுக்காரர் குழந்தைகளே எப்பொழுதும் மோசமான குழந்தைகள். - ஜெர்மனி

பெற்றோர்கள் நூற்பதைக் குழந்தைகள் கழியில் சுற்ற வேண்டும். -( , , )

குழந்தைகளோடு சேர்ந்து விளையாடினால், அவர்களை எப்படியும் திருப்பலாம். -ஜெர்மனி

குழந்தை அழாவிட்டால், தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை. -ரஷ்யா

குழந்தையை அடித்து வளர்க்காதவன், பின்னால் தன் மார்பிலே அடித்துக் கொள்ள நேரும். -துருக்கி

தாய் தந்தையர்

அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது. -ஜெர்மனி

கோழி மிதித்தால், குஞ்சுக்குச் சேதமில்லை. - தமிழ்நாடு

தாய்வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை. -( , , )

பசு உள்ள இடத்தில் கன்றும் இருக்கும். -இந்தியா

செல்வமுள்ள போது தந்தை, வறுமையிலே தாய். -( , , )

ம--4