பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்‌ யேறு

55]

 

சூடும்‌ தாரே ஓடிவா-என்‌
சோலை நிழலே. ஓடிவா
வாடா மலரே ஓடிவா-என்‌.
வஞ்சிக்‌ கொடியே ஓடிவா
தண்டை குலுங்க ஓடிவா என்‌.
சங்கத்‌ தமிழே ஓடிவா
கெண்டை விழியே ஓடிவா-என்‌
இள்ளை மொழியே ஓடிவா
பெண்டிர்க்‌ கரசி. ஓடிவா-என்‌
பேறே உயிரே ஓடிவா
ஒண்டொடியாளே. ஓடிவா-என்‌.
ஓடைப்‌ புனலே ஓடிவா
அறுரர்‌ விருத்தம்‌

வேடப்பன்‌ வந்தான்‌ அங்கே.

விளையாடும்‌ கூழந்தை கண்டான்‌;
ஓடச்செய்‌ இன்றாய்‌ காலும்‌

ஓயாதோ குழந்தைக்‌ கென்றான்‌;
கோடைக்குள்‌ குளிரே “நான்‌ ஓர்‌

குதிரை, நீ௮ர9 என்றான்‌;
கூடத்இல்‌ மண்டி போட்டான்‌.

குழந்தையை முதுகில்‌ கொண்டான்‌..

அப்பாக்‌ குதிரை
இந்து கண்ணி

அப்பாக்‌ குதிரை ஆட்டக்‌ குதிரை
அஞ்சாக்‌ குதிரை ஏய்‌ ஏய்‌ ஏம்‌:
,தப்பாக்‌ குதிரை தாவும்‌ குதிரை:
தளராக்‌ குதிரை ஏய்‌ ஏய்‌ ஏய்‌
சப்பைக்‌ குதிரை இல்லை இல்லை
தமிழக்‌ குதிரை எய்‌ ஏய்‌ ஏய்‌
ஒப்பும்‌ குதிரை ஒயாக்‌ குஇரை
ஒற்றைக்‌ குதிரை ஏம்‌ ஏய்‌ ஏய்‌!
பேசும்‌ குஇரை பெருத்த குதிரை
பிழையாக குஇரை ஏய்‌ ஏம்‌ ஏய்‌:
தோசைக்‌ குஇரை சோற்றுக்‌ குதிரை
சோராக்‌ குதிரை ஏய்‌ ஏய்‌ ஒம்‌: