பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. குடும்ப விளக்கு.


  • யானுமதை ஒப்புிறேன்‌: என்கருத்தும்‌ அன்னதுவே।

நானோ கடையினிலே நன்றிருப்பேன்‌ அப்பா, ஏ 'தேனும்‌ஒரு நூறூரூ பாய்மாதம்‌ ஈந்இடட்டும்‌.

தேனோடை எம்வாழ்க்கை," என்றுரைத்தான்‌ செம்மலுமே!

  • மாமிகொடு மைக்கு வழியில்லை. மைத்துனர்கள்‌

தாமொன்று சொல்லும்‌ தகவில்லை. தன்துணைவன்‌. ஏமாற்றி னான்தன்‌ இளையவனை என்று சொல்லும்‌: மையில்லை. தக்கதென்று” செப்பிமகழ்ந்‌ தார்தாத்தா. பெண்ணுக்குச்‌ சொத்துரிமை இல்லைஎன்பர்‌ நான்‌ தருவேன்‌, கண்ணை இமையிரண்டு காப்பதுபோல்‌ என்மருகர்‌: பண்ணும்‌ குடித்தனத்தை மேலிருந்து பார்த்திடுவேன்‌. உண்மை” என்றான்‌ மாவரசன்‌; பெற்றவளும்‌ ஒப்பினளே! "நகைமுத்தின்‌ எண்ணத்தை நான்‌ஒப்பு இன்றேன்‌.

மிகஒர்‌ “குடும்ப விளக்கேற்றல்‌: நன்றே!

தரும்‌"என்றாள்‌ தங்கம்‌! மணவழகன்‌ தானும்‌

மகனுக்கு மாதமொரு நூறுதர ஒப்பினனே!

மூன்றாநாள்‌ நன்கு மணத்தை முடிப்ப தென்றும்‌. ஏற்றுக்கொண்டார்‌ எல்லோரும்‌. சாப்பா டினிதுண்டார்‌. வான்தோய்ந்த வெண்ணிலவில்‌ வண்டி புறப்படுமுன்‌ தேன்சுரக்கச்‌ "சென்று வருன்றோம்‌” என்றனரே.

இருமண அழைப்பு

அகவல்‌. “விடிந்தால்‌ இருமணம்‌। விண்ணின்‌ நிலவு வடிந்தஇன்‌ றிரவு மணப்பெண்‌ வருவதால்‌, வாழ்த்த நீங்கள்‌ வரவேற்‌ பதற்கும்‌, காலை மலர்ந்ததும்‌ கவின்மண வறையில்‌ மாலை யிட்ட மணமக்‌ கள்தமை வாழ்க என்று வாம்மலர்ந்‌ இடவும்‌, உடன்யாம்‌ பரிந்திடும்‌ உணவுண்‌ ணுதற்கும்‌, வந்தருள்‌ புரிக, வந்தருள்‌ புரிக!" என்று, தங்கம்‌ மணவழகு, நின்று வீடுதொறும்‌ நவின்றனர்‌ பணிந்தே!