பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா


தள்ளுவதைவிடக் கண்களால் விலக்கித் தள்ளுவது உங்கள் குண்டுடலைக் குறைக்க உதவும். அதிகமான கொழுப்புச் சத்துள்ள பொருள்களை, அதாவது சுண்டக் காய்ச்சிய பால், முதலியவற்றைத் தவிர்த்து விடவேண்டும்.

அதிகக் கொழுப்புச் சத்துக் கொண்ட முட்டை ஒரு நாளைக்கு ஒன்று என்பதை நிறுத்தி விட்டு, ஒரு வாரத்திற்கு மூன்று என்று வரைமுறைப் படுத்திக் கொள்வது நல்லது.

வெளியில் விற்கின்ற எண்ணையால் செய்த வடை, பஜ்ஜி, போண்டா போன்ற பதார்த்தங்கள், கேக், பண் வகையறாக்கள் இவைகள் எல்லாம் அதிகக் கொழுப்புச் சத்து உடையவையாகும். இவற்றில் ஏற்படுகின்ற ஆசைகளை எல்லாம் கட்டாயமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்பவர்கள், உணவுப் பண்டங்களில் உப்பைத் தாராளமாக அள்ளித் தெளித்திருப்பார்கள். உப்புச் சத்தெல்லாம் உடலுக்கு ஓரளவுதான் தேவையென்பதால், உப்புக் கைப்பதுபோல் இருக்கும் பண்டங்களை உண்ணாமல் இருப்பது உடலுக்கு நல்லது.

வாயிலுள்ள பற்கள்தான் வயிற்றை காப்பாற்றுகிறது. உடம்பு முழுவதையும், உபத்திரவமில்லாமல் காப்பாற்றுகிறது. உங்கள் பற்களை அதிகமாக நாசம் செய்வது இனிப்பு வகையறாக்கள். நீங்கள் இனிப்பின் நினைப்பையே குறைத்துக் கொள்வது மிகமிக நல்லது.