பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இந்த விட்டமின் தேவைப்படுகிறது. அதிகமான பச்சைக் காய்கறிகள், காடிச்சத்து, மீன்கள் மற்றும் மாமிசங்களில் இது கிடைக்கிறது.

В12 விட்டமின்:

சிவப்பு இரத்த அணுக்கள் நன்கு வளர்ச்சி பெற்று நிறை உழைப்பதற்கு இந்த விட்டமின் முக்கிய காரணமாக அமைகிறது. மிருகங்களில் இருந்து கிடைக்கின்ற எல்லா உணவுப் பொருள்களிலும் இந்த விட்டமின் அதிகமாகக் கிடைக்கிறது.

C- விட்டமின்:

உடம்பிலுள்ள எலும்புகள், பற்கள், தசைகள், அதை மூடியுள்ள தோல் பகுதிகள் எல்லாவற்றையும் தரமாகவும், திறமாகவும் வைத்துக்காக்க உதவுகிறது. உடலுக்குள் நுழைகிற நுண்கிருமிகளை எதிர்த்துப் போராடி தடுத்து நிறுத்துகிற பாதுகாப்புப் பணியையும் இந்த C விட்டமின் செய்து வருகிறது. ஆரஞ்சுபோன்ற எல்லாப் பழ வகைகளிலும், பச்சை மிளகு பயறுகள், தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு வகைகளில் மிகுதியாகக் கிடைக்கிறது.

D-விட்டமின்:

நல்ல மென்மையான நலமும், வளமுள்ள பற்களை வளர்த்துக் கொள்ள இந்த விட்டமின் உதவுகிறது. உடம்பிலே இருக்கிற கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சக்திகளை உடலானது பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.