பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தாகமும் தண்ணீரும்:

தேகத்திற்கு தண்ணீர் அளவு குறையும்போது அதனை சரிக்கட்டிக் கொள்ள நாம் தண்ணீர் குடிக்கிறோம். ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மீதி இரண்டு லிட்டர் தண்ணீருக்கு என்ன செய்வது? எங்கே போவது?

இறைவன் கொடுத்த இயற்கை உணவுகளிலேயே நீர்ச்சத்து நிறைய இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களோ இல்லையோ, இங்கே நாம் தந்திருக்கிற பட்டியலைப் பார்த்தால் உண்மைநிலை புரியும்.

உணவு உள்ள நீர்ச்சத்து
1. வெள்ளிரிக்காய் 99%
2. காரட் 90%
3. ஆரஞ்சு 84%
4. முட்டைகள் 75%
5. பாலாடைக்கட்டி 75%
6. ரொட்டி 39%


உணவு வகைகளைப் பற்றி நாம் ஓரளவு தெரிந்து கொண்டு இருக்கிறோம். உணவைக் குறைப்பதால் மட்டும் உடல் எடையைக் குறைத்து விடமுடியாது. பட்டினி கிடப்பதைவிட பயன் தரும் பயிற்சிகளைச் செய்வதால். உடலுக்கு இரட்டிப்புச் சந்தோசம் கிடைப்பதோடு மனதிற்கும் இரட்டிப்புச் சந்தோசம் கிடைக்கிறது.

இனி உடற்பயிற்சி முறைகளைப் பார்ப்போம்.