பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

77


பயிற்சியைத் தொடங்கலாம். கெண்டைக் கால்கள் வலித்தாலோ, தொடை தசைகள் பின்னிக் கொண்டாலே, நீங்கள் எந்தப் பயிற்சி செய்தாலும் உடனே நிறுத்திவிட்டு ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உடற் பயிற்சியைத் தொடங்குங்கள். கூடுதலாக நேரத்தைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

முதலில் நின்றயிடத்திலே இருந்து நடப்பதுபோல, கால்களை உயர்த்தி கைகளை வீசி, மீண்டும் அதேயிடத்தில் முடித்து நடப்பதுபோன்ற பாவனை செய்யுங்கள். இதை நின்றயிடத்திலேயே நடப்பது (On the spot walking) என்பார்கள். பிறகு கால்களை நன்றாக உயர்த்தி முழங்கால் முட்டி இடுப்பளவு வரும் வரை உயர்த்தி, பிறகு அதேயிடத்தில் கால்களை ஊன்றி, கைகளை வீசி வேகமாக நடப்பதுபோல ஒரேயிடத்தில் நடக்க முயற்சிக்க வேண்டும். இதை நின்ற இடத்திலே வேகமாக நடத்தல் (On the spot marching) என்று கூறலாம். இப்படி இரண்டு மூன்று நிமிடங்கள் இயக்கினாலே உடலில் களைப்பும், இணைப்பும் தோன்றும், உடனே நீங்கள் இயக்கத்தை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். பிடிவாதமான முயற்சிக்கு நீங்கள் இடங்கொடுக்கக் கூடாது.

இப்படி ஒருவாரம் தொடர்ந்து செய்கிற பொழுது உங்கள் உடம்பில் நெகிழும் தன்மை (Elastisity) யும், நீடித்த நெஞ்சுரமும் (Endurance) கிடைக்கும். அதனால் நீங்கள் அடுத்த கட்டமான மெதுஒட்டம் ஓடுவதற்கு முயற்சிக்க வேண்டும். இது மூன்றாவது கட்ட முயற்சி முறை.