பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மெதுஓட்டம் என்பது, ஓட்டமும் அல்ல. நின்றயிடத்திலேயே நடக்கின்ற நடையுமல்ல. வேகமாக நடப்பதற்குப் பதிலாக, ஒடுகின்ற பாவனையில் கைகளை மார்புக்கு முன்னே வைத்துக் கொண்டு, ஓரடி தூரம் இருப்பதுபோல, கால்களை வைத்து முன்னோக்கிச் செல்லும் பயிற்சி முறையாகும்.

முதலில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் ஒடலாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஓடுகிற நேரத்தை அதிகப்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும்.

அதற்குப் பிறகு ஓடுகிற இடத்தில், அல்லது பாதையில் அல்லது வீட்டிற்கூட இதைச் செய்யலாம். படிகள், ஒரு முக்காலி, பெஞ்சி இருந்தால் அதில் ஏறி இறங்கி, ஏறியிறங்கிப் பார்க்கவும். இதுபோல உயரமான படிகளில் ஏறியிறங்குவது தொடர்ந்தாற்போல் முப்பது முறை வலதுகாலால் ஏறியிறங்கியும், பிறகு இடது காலால் ஏறியிறங்கியும் செய்கிறபோது உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற சக்தியின் நிறைவு புரியும்.

எப்படி ஓடவேண்டும்? இஷ்டப்படி ஓடலாமா என்ற சந்தேகம் எழும். இஷ்டம்போல் ஓடுவதுதான் மெது ஓட்டம். அதைக் கஷ்டமாக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் சில கட்டுப்பாடான விதிமுறைகள் உள்ளன. இதைக் கட்டாயம் பின்பற்றினால், கட்டுக் கோப்பான உடலமையக் கைகொடுத்துக் காப்பாற்றும்.

ஓடுகிறமுறைகள்

1. எப்பொழுதும் மெது ஒட்டத்தை தார் பதித்த சாலைகளின்மேல் ஓடக்கூடாது. மணற்பாங்கான தரை