பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பயிற்சியாகும். இசையை இடையிலே நிறுத்தாது தொடர்ந்து ஆடுகிறபோதுதான் எதிர்பார்க்கும் பலன்கள் நிறையவே கிடைக்கும்.

3. விறுவிறுப்போடு பங்கு பெறும் விளையாட்டுக்கள் (games)

1. பந்து விளையாட்டுக்கள்: (Ball Games)

எல்லாவிதமான பந்து விளையாட்டுக்களிலும் பங்கு பெறுகிறபோது, உடலுக்குப் பலமும், நலமும் நிறையவே கிடைக்கிறது.

ஆர்வமுள்ளவர்களே! உங்களுக்கு ஒரு விளையாட்டை தினமும் விளையாடுவதற்கு வசதியமைந்தால், அதிலேயே தொடர்ந்து ஆர்வமுடன் பங்குபெறலாம்.

இங்கே ஒரு பட்டியலைத் தந்து இருக்கிறோம். எந்த விளையாட்டுக்கு என்ன சக்தியைக் கொடுக்கும் அடிப்படைப் பண்பாற்றல் இருக்கிறதென்று இங்கே நட்சத்திரக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறோம். நமக்குத்தேவை நெஞ்சுரம், வலிமை, நெகிழுந்தன்மை. ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு நேராக ஒரு நட்சத்திரம் () இரு நட்சத்திரம் (★★), மூன்று நட்சத்திரம் (★★★), போட்டுக் குறியிட்டுக் காட்டியிருக்கிறோம்.

மூன்று நட்சத்திரமென்றால் மிகுந்த சக்தியும், இரண்டு நட்சத்திரமென்றால் மிதமான சக்தியும், ஒரு நட்சத்திரமென்றால், சாதா சக்தியும் தருவது என்பதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.