பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மேலே கூறிய விளையாட்டுக்களில் பங்கு பெறுவதற்கு வெளியில் செல்ல முடியவில்லை. வாய்ப்புக் கிடைப்பதும் கஷ்டமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அதற்காக வருத்தப்பட வேண்டாம். இருக்கிற இடத்தைப் பயன்படுத்தி வேண்டிய பயிற்சிகளை விருப்பம்போல் செய்து கொள்ள முடியும் நீங்கள் மனது வைத்தால் எல்லாமே நடக்கும்.

4. இதமான எளிய பயிற்சிகள்

தேகத்தை வளைத்து, முடுக்கி, நிமிர்த்தி எழுப்புவதுபோல சின்னச்சின்னப் பயிற்சிகள் உங்க ளைச் சிரமப்படுத்தாமல் சீரான உடம்பைப் பெற உதவும்.

உங்களுக்குத் தேவை - அதிகமான காற்றை உள்ளிழுக்க வேண்டும். உங்கள் தசைப் பகுதிகளைப் பிடித்து விடுவது போல மசாஜ் செய்ய வேண்டும். இந்த இரண்டும் நீங்கள் வீட்டிலேயே பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுது நிச்சயமாகக் கிடைக்கும்.

முதலில் உங்கள் உடைகளை இறுக்கமானதாக இருப்பதைத் தவிர்த்துத், தளர்வாக அணிந்து கொள்ளுங்கள். பயிற்சி செய்யும் இடமானது தூசிகள், குப்பைகள் இல்லாமல் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஜமக்காளத்தை எடுத்து விரித்துப் போடுங்கள். இனி பயிற்சியை தொடரலாம்.

1. வயிற்றை உயர்த்துதல்: (Stomach lifts)

விரித்து போடப்பட்டிருக்கும் ஜமக்காளத்தில் மல்லாந்து படுத்துக்கொண்டு, இரண்டு கைகளையும் பக்க வாட்டில் உடம்போடு சேர்த்து வைத்துக்கொண்டு,