பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 139


அதன் வளர்ச்சியும்) என்பர் சர் ஆல்பெர்ட் சுவைட்சர். ஆதலால், திருக்குறள் ஓர் இலக்கியம்! இல்லை, அஃது இலக்கிய அமைப்பில் சிறப்புற்று விளங்கும் அறநூல். இலக்கியம், அறநூல் ஆகிய தகுதிகளோடு அஃது ஒரு சிறந்த அரசியல் நூலாகவும் விளங்குகிறது. மேலும் சிறந்த ஞானத்தின் கருவூலமாகவும் திகழ்கிறது. திருக்குறள் ஒரு மறை. மனித வாழ்க்கையை அறிவியற்பார்வையோடு அணுகி ஆராய்ந்து வழி நடத்தி வாழ்விப்பது திருக்குறள். திருக்குறளைப் போன்ற ஒரு முழுநூல் மக்களாகப் பிறந்தார் பேசும் வேறு எம்மொழியிலும் இல்லை

மனித வாழ்க்கை

மனித வாழ்க்கை அருமைப்பாடுடையது. அது பழிக்கத் தக்கதன்று; சாவை விரும்பிச் செல்வதன்று: பழந்தமிழகத்தின் கொள்கை, வாழ்க்கையைப் போற்றுவதாகும். தமிழகத்தில் தோன்றிய அனைத்துச் சமயச்சான்றோரும் வாழ்க்கையை வரவேற்றுப் போற்றியுள்ளனர்.

"வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்"

- (அப்பரடிகள், கோயில்-5)

என்று திருமுறை, வாழ்க்கையைப் போற்றும்படி அறிவுறுத் துகிறது. போற்றத்தக்க இப்பிறவி இன்னும் வேண்டும் என்பதை,

"மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"

- (அப்பரடிகள் கோயில்-4)

என்று அப்பரடிகளின், அருந்தமிழ் கூறும்.

மானிட வாழ்க்கை வெற்றிக்குரியது என்பதைக் ಧಿ. உணர்ந்து "மானுடம் வென்றதம்மா" என்று உளங்குளிர வியப்புணர்ச்சியுடன் பாராட்டுவான். ஆம்! மானுடம் பிண்டமன்று; மானுடம் ஒரு வாழ்க்கை.