பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களைப் பற்றிய செய்திகள் வரலாற்று ஏடுகளில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளன என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் ஏற்று, "வரலாறு திரும்பி வரும்" என்ற பழமொழியைப் பொய்யாக்கும் வகையில் ஏற்படும் நாட்டுப்பற்று வரவேற்கப்படும். அஃதன்றி, நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையேயுள்ள எல்லைகளைப் பெரிதுபடுத்தி, பிரிவினை உணர்வுகளையும் ஆக்கிரமிப்பு உணர்வுகளையும் வளர்க்க நாட்டுப்பற்று கருவியாக அமைதல் கூடாது. நாட்டுக்கும் நாட்டுக்கும், இடையேயுள்ள எல்லைகளை அகற்றி மானிடத்தை இணைக்கவே திருக்குறள் நெறி முயற்சி செய்யும். காலப்போக்கில் உலக அரசு காண்பதே திருக்குறட் சமுதாயத்தின் இலட்சியம்.

திருக்குறட் சமுதாயத்தில் எந்தவித வேறுபாடுகளுக்கும் அங்கீகாரம் இல்லை. வேறுபாடுகளை வற்புறுத்துகின்ற, வளர்க்கின்ற எந்த ஓர் அமைப்பும் இயக்கமும் திருக்குறட் சமுதாயத்தில் இருத்தல் இயலாது; இருக்காது. சமயம், ஆன்மாவைச் சார்ந்த, வளர்ச்சியின்பாற்பட்ட அறிவியல் சாதனமாக அங்கீகரிக்கப் பெறும்; ஆன்மாவின் - உயிரின் தரப்பாடு, அறிவு, சால்பு, பண்பாடு ஆகியவைகளால் அறியப்பெறும். இத்தகு உயரிய விழுப்பங்களையே ஆன்மிகம் என்று திருக்குறள் கருதுகிறது. திருக்குறட் சமுதாய ஆன்மிகம் - கடவுள் தம்பிக்கை, குணங்கள் அடிப்படையில் - "எண் குணத்தான்", "வேண்டுதல் வேண்டாமையிலான்” என்ற நிலையிலேயே ஏற்றுக்கொள்ளப்பெறும். திருக்குறள் நெறியில் கடவுள் வழிபாடு என்பது 'பொய்தீர் ஒழுக்க நெறி" நிற்பதேயாகும்.

ஆன்மிகம் என்ற பெயரில் மத வேற்றுமைகளையும் மூடப்பழக்கங்களையும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ எந்தவோர் அமைப்பும் பரப்ப முடியாது. அத்தகைய முயற்சிகள் திருக்குறட் சமுதாயத்தில் முற்றாகத் தடை செய்யப்படும். கடவுள் நம்பிக்கையின் பெயரால் மனித குலத்தில் பிரிவினைப்படுத்துதலும் ஒதுக்கல் கொள்கை