பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மேலும் மேலும் வளரும். சுவைக்கச் சுவைக்க நேற்றையச் சுவையினும் இன்றையச் சுவை மேம்பட்டு விளங்கும். தலைமகன் - தலைமகளிடையே மாறுபாடில்லாது போனாலும், காதற் சுவை புதிது புதிதாகத் தோன்றும். அது, காதலின் இயற்கை அதுபோலத்தான் அறிவு இயல்பாகவே நாளுக்கு நாள் தழைத்து வளரும்.

ஆதலால் அறிவைத் தேங்கிக் கிடக்கும் குட்டையாக்கிக் கொள்ளாமல் மேலும் மேலும் புதிய சிந்தனையால் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதைத் திருவள்ளுவரின்,

"அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறுஞ் சேயிழை மாட்டு”

(1110)

என்ற குறளால் அறியலாம்.

ஒப்பற்ற உவமை!

ஒருவனும் ஒருத்தியுமாக வாழ்வது தமிழ் மரபின் ஐந்திணை ஒழுக்கம். அதாவது விழுமிய அன்பு வாழ்க்கை, ஒருவனும் ஒருத்தியுமாகக் கூடிக் கலந்து வாழும் வாழ்க்கையை விளக்கக் கவிஞர்கள் பல்வேறு உவமைகளை எடுத்துக்காட்டுகின்றனர். இன்று, ‘மணியும் ஒளியும்போல’, ‘மலரும் மணமும் போல’, ‘தமிழும் இனிமையும் போல’ என்றெல்லாம் எடுத்துக்காட்டிப் பேசுகின்றார்கள். இந்த எடுத்துக்காட்டு உவமைகள் ஒன்றினும் ஒன்று தரத்தில் தாழ்ந்ததாக இருக்கின்றன. ஒன்றில்லாமலும் ஒன்று இருக்கலாம். மலர் நீங்கிய வேறொரு பொருளிலும் மணம் உண்டு. மணி நீங்கிய வேறொரு பொருளிலும் ஒளியுண்டு. அதேபோல, இனிமை வேறொரு பொருளிலும் உண்டு.

காதல் வாழ்க்கையில் கிடைக்கும் இன்பம் பிற துறைகளில் கிடைக்கமுடியாது. காதல் வாழ்க்கையின் மூலம்