பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

61




பிப்ரவரி 14


நின் சித்தப்படி நடக்கச் சித்தமாயுள்ளேன்! அருள்க!

இறைவா! உன்னோடும் நான் "கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறேனே. உனக்குத் தெரியாதது என்ன? இறைவா! நின் அன்பு நெறியை நாங்கள் துறந்தோம். அன்றே, நீ எங்களுக்கு அந்நியனாகிவிட்டாய். அன்பும்-ஒப்புரவும் என்னிடத்தில் நீ காண விரும்பிய வாழ்க்கைப் பண்புகள். இவைகளை நான் கனவிலும் கண்டதில்லை. மாறாக - பகை 'நான்', 'எனது' என்ற உணர்வின் பாற்பட்ட வெறிச் செயல்கள். நின் திருவுள்ளம் நொந்தது. நீ என்னையும்-என் பொய்யையும் புறத்தே நிறுத்திவிட்டுப் போய் விட்டனை. நீ என்றோ எங்களைவிட்டு நீங்கிவிட்டாய். கற் சிலைகள் மட்டுமே கோயில்களில் உள்ளன. மீண்டும் வா. கற்சிலையில் எழுந்தருளி ஆட்கொள்வாயாக! நின்சித்தப்படி நடக்கச் சித்தமாயுள்ளேன். இனி உன் சந்நிதியில் பாவம் செய்ய மாட்டேன். இனி அன்பே என் தவம். தொண்டே என் வாழ்க்கை. இது சத்தியம்.