பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மார்ச் 10


நின் அடிமை கெட்டுப் போதல் நினக்கு அழகன்று!


இறைவா, என்ன விந்தை. உன்னிடத்தில் கூட குற்றங்களை ஒத்துக் கொண்டு அழ, மன்னிப்புக் கேட்க மனம் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. பெருமை பேசுகிறது. இறைவா, உன் சந்நிதியில் அழுதாலே போதுமே, மலை போலச் செய்துள்ள தீவினைகள் பறந்தோடிப் போகுமே.

இறைவா, மன்னித்துவிடு! அழக்கூடாது என்று நான் நினைக்கவில்லை. வெட்கம் அதனால்தான் அழவில்லை. உன் சந்நிதியில் அழ வெட்கப்படுவது பிழையென உணர்ந்துள்ளேன் இனி நாள்தோறும் நின் சந்நிதியில் நின்னை நினைந்து நினைந்து அழுவேன். உன்னைப் பெற அழுவேன். நீ ஆண்டான், நான் அடிமை. நின் அடிமை கெட்டுப்போதல் நினக்கு அழகன்று. காப்பது நின் கடமை. நீ என்னைக் காப்பாற்ற வேண்டும் இறைவா! உன் கருணைக்குப் பாத்திரமான ஏழை அழுகிறேன். இரங்கியருள் செய்! இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்..