பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சாதி நாகரிகத்தின் தொன்மை நாகரிகங்களாகும். தமிழர் நாகரிகம் அனைத்துத் துறைகளிலும் செழித்து வளர்ந்து புகழ் பூத்ததாகும். அவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முன்பே சமய நெறியில் கால்கொண்டனர். அவர்களது சமயம் சிவநெறி யாகும். இச்சிவநெறி காலத்திற்குக்காலம் முறையாக வளர்ந்து மெய்கண்ட தேவர் காலத்தில் வடிவம் பெற்றது.

தென்குமரிக்கண்ட மக்கள், சிவன், சேயோன் என்ற திருப்பெயர்களில் சிவபெருமானை வழிபட்டு வந்திருக்கின்றனர். சிவன் ஒளிவடிவானவன். ஒளிவடிவிலும் உயிர்களின் அனுபவத்திற்கு ஏற்றவாறு பல்வேறு தரநிலைகளில் (ஒளிக்கற்றை, வெப்பநிலை) நின்று அருள்பவன். உலகியலை வெப்பஇயல் இயக்குவதைப் போல சிவமே நெருப்பை இயக்கும் பெரும் பொருளாக இருந்து இயக்கி வருகிறது.

சோதியே! சுடரே! சூழ்ஒளி விளக்கே!
(திருவாசகம், அருட்பத்து-1)

என்ற திருவாசகம், சிவம் என்ற பேரொளியின் படிநிலைகளை விளக்குவது. சிவத்தின்தொழில்-இயல்புகள் குறித்துப் பல திருமேனிகளில் சில வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன.

அவற்றுள் சிறப்புடையன ஐந்து. முதல்நிலை, “சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” ஆக அடல்விடையூர்ந்து ஆட்கொண்டருளும் நிலை கொன்றை மாலையும் திரிசூலமும் கொண்டு விளங்கும் திருக்கோலம், இரண்டாவது படிவம். அம்மையப்பன், இந்த அம்மையப்பன் திருவுரு எல்லா உறுப்புகளும் முறையாக அமைந்து, அம்மையை இடப்பாகத்திற் கொண்டு விளங்கும் மங்கை பங்கன் திருமேனியாகப் போற்றப் பெற்றது. அறிவியலில் பொருளையும், பொருளின் ஆற்றலையும் தனியே பகுத்து ஆராயும் மரபு பிற்காலத்தே தோன்றியது. அம்மையப்பன் வழிபாடு அந்த அடிப்படையில் சங்க காலத்திலேயே தோன்றி வளர்ந்ததாகும். பாவாணர், “கடல் கொண்ட