பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

231


நமது ஒப்புயர்வற்ற சிவநெறியையும் சமுதாயத்தையும் காக்கத் தோன்றிய திருமடங்கள் தமக்குள்ளேயே முரணிக் கொண்டு முறையீட்டு மன்றங்களுக்குச் செல்வது வேதனையைத் தருகிறது. இந்த முரண்பாடுகளுக்குள்ள காரணங்கள் அற்பமானவைகள்.

நமது சைவத் திருமடங்கள் அவைகளின் நோக்கத்தை நிறைவேற்றவும், காலத்தின் தேவைக்கு, கொண்டு வந்து சேர்த்திருக்கும் பணிகளைச் செய்யவும் தம்முள் தனித்தனி நிறுவன உணர்வுகளைக் கடந்து, துறந்து ஒருமையுணர்வுடன் ஓரமைப்பாக உருப்பெற வேண்டும். பல நூற்றுக்கணக்கில் துறவிகளை-தொண்டர்களைத் தயார் செய்ய வேண்டும். முறையான பணிப் பங்கீடும், நிதிப் பங்கீடும் செய்து சிவநெறியைச் சார்ந்த மக்களை, கல்வியில், தரத்தில் ஞானத்தில் உயர்த்த வேண்டும்.

நமது திருமடங்களின் நிலையில், வலிமைக் குறைவுகள் அகநிலையிலும், புறநிலையிலும் வளர்ந்து புறத்தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்து அறநிலையச் சட்டம் அவர்களைப் படிப்படியாகக் கணக்குப் பிள்ளைகளாக்கிக் கொண்டு வருகிறது. திருமடங்களின் தலைவர்கள் தம்மைத் தாமே சிறந்த கூட்டமைப்புக்கும், நேரிய நிர்வாகத்திற்கும் தணிக்கைக்கும் மேற்பார்வைக்கும் தமக்குள்ளேயே விகார உணர்ச்சிகளின்றி ஏற்பாடுகள் செய்துகொண்டு நமக்கு நாமே ஆட்பட்டுக் கொள்கின்ற நிலை உருவாகுமானால் திருமடங்களின் வரலாற்றில் அரசின் தலையீடுகளைக் குறைக்க முடியும்.

விவிலிய சமயத்தில் அரசின் தலையீடு இல்லை. ஏன்? அது அத்தகைய கூட்டாட்சி முறையை மேற்கொண்டிருப்பதே காரணம். கிறித்துவத் துறவிகள் இடமாற்றங் களுக்கும் பணிமாற்றங்களுக்கும் உரியவர்கள். அவர்களிடத்