பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

311


கோட்டுக்கு வந்த பிறகு-அவனுடைய அனுபவங்கள், உலகியல் அனுபவங்கள் நிறைவு செய்யப்பெற்ற பிறகு வேறு திசையிலே திருப்பிவிடப் பெறுகிறது. அப்படித் திருப்பி விடுகிற காலம் வருகிறபொழுது 17-ஆம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிலே இருந்த அறிவு வெள்ளப் ரட்சியைவிட, ஒரு சிறந்த புரட்சி உண்டானால் கூட நாம் ஆச்சரியப்படத்தக்க தில்லை. காரணம் மனிதனுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் இந்த உலகியலைச் செழுமைப் படுத்துவதிலேயே இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகள் முடிந்த பிறகு அவன் அருளியல் வெள்ளத்திலே-அருள் ஞானத்திலே-பொருளுக்குப் பொருளாக-பொருளின் உள்ளீடாக-பொருள் ஆற்றலாக இருக்கின்ற உயர்ந்த தன்மைகளை ஆராய்கின்ற ஆராய்ச்சிக்கும் போய்விடுவான். அப்பொழுது அருளியல் வழிப்பட்ட உயர்ந்த சமுதாயம்-உயர்ந்த அறிவியல் உலகம் மலரும்.

அறிவியல் இருக்கிறதே அது ஒழுங்காய், முறையாய் வளர வேண்டுமானால் அதற்கு அருளியல் என்ற வேலி தேவைப்படுகிறது. அறிவியல் வளர்கிறது. மனிதனுடைய அனுபவத்துக்காகத்தான் அறிவியல் வளர்கிறது. இறைவன் மனித உலகத்துக்குக் கொடுத்த அற்புதமான சொத்து, இந்த அறிவுலகம். அற்புதமான சொத்து இந்த மனித ஆற்றல். இந்த அறிவாற்றல்-இந்த மனித ஆற்றல் ஒருவரையொருவர் பழி வாங்குவதற்குப் பயன்படாமல் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று சொன்னால் அங்கே அருளியல் என்ற வேலி தேவைப்படுவது ஒன்றாகிறது. எனவே விஞ்ஞான உலகத்தில் விஞ்ஞானம் முந்தி மோதிக் கொண்டு போகின்ற பொழுதுகூட இடறி விழும். விடாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருவியல் வேலியை அவனே அமைத்துக் கொள்கின்ற ஒரு சூழல் வரத்தான் போகிறது. அதேபோல அருளியலுலகம் இருக்கிறதே, அது தன்னடைய தேவைகளை - தன்னைச் சார்ந்து வருகின்ற மக்களின் தேவைகளை