பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

89


தொடங்கவேண்டும்; திருத்தொண்டுகளைத் தொடங்க வேண்டும். அதுவே இன்று செய்யவேண்டிய பணி; முதற்பணி.

மேற்கோள் விளக்கம் 

1. திருஞானசம்பந்தர், திருவிராமேச்சுரப்பதிகம், 2.
2. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 31.
3. திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 135.
4. திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 136.
5. திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 157.
6. திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 70.
7. திருத்தொண்டர் புராணம், திருஞான சம்பந்தர் புராணம், 24,
8. தொல். செய்யுள். 178.
9. தொல். செய்யுள். 178. நச்சினார்க்கினியர் உரை.
10. காஞ்சிப்புராணம், தழுவக், 245,
11. திருமந்திரம், 1821.
12. திருவாசகம், பிடித்தயத்து-9
13. திருவாசகம், திருவெம்பாவை, 17



3. சமய சமுதாய மறை


முன்னுரை

திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் ஒரு சிறந்த அறநூல்; முழுதுறழ் அறநூல் மறைநூல்; பொதுமறை நூல்: மனிதராகப் பிறந்தோர் பேசும் எம் மொழியிலும் இது போன்றதொரு இலக்கியம்-அறநூல் தோன்றியதில்லை. புறநானூறு ‘அறம்பாடிற்றே’[1] என்று திருக்குறளைச் சிறப்பித்துக் கூறுகிறது. உமாபதி சிவம் ‘மெய் வைத்த சொல்’[2] என்று பாராட்டுவார். இருபதாம் நூற்றாண்டில் மனித

  1. புறம்-34.
  2. நெஞ்சு விடு தூது, அடி-26,