பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இது என்ன புதிராக இருக்கிறது? சிந்திக்கின்ற உயிருக்கு “நான் யார்?” என்பது கூடவா தெரியாது? “நான் யார்?” என்ற கேள்வி பருவுடலைப் பற்றியதுமன்று; ஊனுடல் வாழ்க்கையைப் பற்றியதுமன்று; இது அஞ்சலகத்தின் முகவரி, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரம். குணங்களைப் பொருத்த கேள்வி அது. ‘நான்’ நான்தானா? அல்லது ஆணவமயமா? ‘நான்’ எப்படி இருக்கின்றேன்? எப்படி வாழ்கின்றேன்? எப்படி நடந்து கொள்கின்றேன்? மனிதனாகவா? கொடிய விலங்குகளைப் போலவா? நச்சுச் செடிகளைப் போலவா? யார் மனிதர் உறுப்புக்களால் மட்டும் ஒருவர் மனிதராகி விடுவதில்லை. மானிடரில் பலர் மனிதர் போல இருப்பர்; ஆனால் மனிதரல்லர்! ‘மக்களே போல்வர் கயவர்’ என்றது திருக்குறள். நான் யார்? இதற்கு விடை அடுத்த ஆய்வில் பொருந்திக் கிடக்கிறது. அதாவது, “என் உள்ளம் ஆர்?” என்ற கேள்வியில்! இதற்கு விடை எங்கிருக்கிறது? ஆய்வின் அடுத்த பகுதியில் “ஞானங்கள் ஆர்?” என்ற பகுதியில்! ஆம்! உயிர் வாழ்க்கை அறிவால் அமைவது! உயிரின் வேறுபாடுகள் அறிவின் பாற்பட்டனவேயாம். மனிதரில் விலங்குக் குணமுடையார் இல்லையா? ஏன்விலங்கினும் இழிந்த குணமுடையவர்கள் இல்லையா? இருக்கின்றார்கள். அவர்கள் இழிபிறவிகள்; ஆக, உயிர் தம் நிலையில்-அறிவு நிலையில் இல்லாமல் தலைதடுமாறிக் கிடந்தால் நன்மைகூடப் பிழையாகத் தெரியும்.

எது அறிவு? அறிவு-அறியாமை வளர்ச்சி நிலையைச் சார்ந்தது. அறிவிலிருந்து அறியாமை தோன்றும்! “அறிதோறு அறியாமை” என்பதறிக. அறிந்தவர்கள் மேலும் அறிய வேண்டியன உள்ளன என்று கருதும் உணர்வே அறியாமை. இந்த அறியாமை, அறிவினைத் தேடுதலில் முனைப்பைத் தரும். ஞானம் என்பது அறிவு-அறியாமைச் சுழற்சிகளைக் கடந்துவளர்ந்த பேரறிவே! அறியாமைக் கலப்பில்லாத