பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

203


மேற்கொள்ள வேண்டும். பேரவை ஒரு பிரச்சார நிறுவனமாக வெளியீட்டு நிறுவனமாக இயங்கவேண்டும். இப்படி அமைப்பது சாலும் என்று நம்புகிறோம்.

இந்து அறநிலைய ஆட்சித்துறை மக்களுடன் தொடர்புடையதாகவும் மதத் தலைவர் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட குழுவின் ஆலோனையிலும் இயங்கும்படியாகவும் செய்தல் உடனடியாக அவசரத் தேவை. இந்து சமூகத்தில் நலிந்தவர்களின் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடக்கூடிய இந்த சமுக மேம்பாட்டு வாரியத்தைத் தன்னாட்சித் தன்மையுடையதாக அமைத்து, செயல் விருப்பமும் முற்போக்குச் சிந்தனையும் உடைய தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்து சமூகத்தில் நலிந்தோர்களின் மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். இந்த வாரியத்திற்கு எல்லா இந்து சமய நிறுவனங்களும் தம் தம் வருமானத்தில் ஐந்து விழுக்காடு, நிதி பங்களிப்புத் தரவேண்டும்.

இந்த வாரியம் கல்விப்பணி, மருத்துவப் பணி இன்ன பிற மேம்பாட்டுப் பணிகளைச் செய்து இந்து சமூகத்தில் நலிந்த பிரிவினர், மற்ற சமூகத்தினரோடு ஒத்த நிலைக்கு உயர்ந்து வரத்தக்க வகையில் ஆக்கப் பணிகளை மேற் கொள்ளவேண்டும். இது உடனடியான அவசர - அவசியத் தேவை. இம்முயற்சியின் மூலமே நம்முடைய மக்கள் பாதுகாக்கப்படுவர்; மதமும் வளரும்.

பொதுவாக வாழ்க்கையில் ஏற்படுகிற வெறுப்புகள் அதிருப்திகளால் மத மாற்றம் தூண்டிவிடப்படுகின்றது. நாடு விடுதலை பெற்று 33 ஆண்டுகளாகியும் இன்னமும் கிராமப்புறங்களின் நிலை ஒரே மாதிரிதான் இருக்கிறது. நாடு முழுவதும் தீமையாக வளர்ந்துள்ள பணவீக்கம் கூட கிராமங்களில் எட்டிப்பார்க்காதது ஏன்? என்றுகூடத் தெரிய வில்லை. ஆதலால் கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்குச்