பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைப்புகள் வேண்டுமானால் வளராலாம். ஆனால் மதம் வரளாது. கோயில்கள் உயரலாம், ஆனால் கடவுள் அங்கு வரமாட்டார். இதனால் மனித குலத்துக்கு என்ன பயன்?

மதங்களை அனுட்டானத்துக்குக் கொண்டு வருபவர்கள் மதங்களை அனுபவநிலையில் காண்பவர்கள். மதங்களைப் பற்றிய விவாதங்களில் (சர்ச்சைகளில்) ஈடபடமாட்டார்கள்; ஈடுபட நேரமிருக்காது. இன்று நடைபெறுவதெல்லாம் மதங்களைப்பற்றிய சர்ச்சைகளே! யாரும் தம் மதத்தில் கொள்கைகளைக் கோட்பாடுகளை எடுத்துச் சொல்வதில்லை. மற்ற மதங்களை விமர்சனம் செய்து எரிவும் வெறியும் ஊட்டுவதிலேயே ஈடுபடுகின்றனர். இந்தச் செயல்முறை நாத்திகத்தை விடக் கொடுமையானது.

ஏன் இந்த விநோதம்?

இந்தியாவில் உள்ள முக்கிய மதங்கள் மூன்று. அவை இந்து மதம், கிறித்துவ மதம், இசுலாமிய மதம். இந்த மதங்கள் மூன்றுமே அடிப்படையில் வேறுபாடுடையன அல்ல. மூன்றுக்குமே கடவுள் நம்பிக்கை உண்டு; அனுட்டானங்களில் தான் வேறுபாடு, கடவுளை நம்புகிற மதத்திற்கும் கடவுளை நம்பாத புத்த மதத்திற்கும் சண்டையில்லை. ஏன் இந்த விநோதம்: “கடவுளை நம்புதல்-கடவுளை நம்பாமை” மட்டுமே மதம் அல்ல. திராவிடர் கழகத்தினர் பொதுவுடைமைக் கட்சியினர் மட்டுமே கடவுளை நம்பாதவர்கள் அல்லர். புத்த மதத்தினருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் இந்துமத ஆர்வலர்கள் புத்த மதத்தை எதிர்ப்பதில்லை. ஏன்? திராவிடர் கழகம் சாதி ஆதிக்கங்களை எதிப்பதைப்போல் புத்தமதம் எதிர்ப்பதில்லை. பொதுவுடைமைக் கொள்கையினர் சுரண்டலை எதிர்ப்பதைப்போல புத்தமதம் எதிர்ப்பதில்லை. அதனால் ஆதிக்கம் என்ற பேரில் சாதிகளையும் சுரண்டலையும் வளர்ப்பவர்கள் திராவிடர் கழகத்தையும் பொதுவுடைமைக்