பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

223


இந்திய அரசு இந்திய மக்களின் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றைக் காணவேண்டும். அம் மையத்தின் தலைவராகப் பிரதமர் இருக்கவேண்டும்.

இம்மையத்தில் இந்தியாவிலுள்ள பல்வேறு மதங்களின் தலைவர்கள், அறிஞர்கள், மத நிறுவனங்களின் பேராளர்கள் உறுப்பினர்களாக இடம்பெறுதல் வேண்டும். இந்த மையம் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்க்கத் திட்டமிட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையில் எழும் பிரச்சனைகளுக்கு நட்புறவு அடிப்படையில் தீர்வு காணவேண்டும். இத்தகைய முயற்சி நல்ல பலனைத்தரும். மதப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும் அமைப்புக்கள் - இயக்கங்களுக்கு இம்மையம் விதிமுறை ஏற்பளிக்கவேண்டும். இம்மையத்தால் முறையாக ஏற்பளிக்கப்பெறாத எந்த ஒரு சமய நிறுவனமும், அமைப்பும் இயக்கமும் முறையானது அல்ல என்று அறிவிப்பதோடன்றி, சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தத்துவ ஞானத்தினால் ஏற்படும் மத மாற்றங்களைத் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் இன்று மத மாற்றம் ஆள்பிடிப்பதற்காக நடைபெறுகிறது. இது தவறு. இந்த மதமாற்ற முறையை அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் உடனடியாகக் கைவிடுவது நல்லது. அவசியமும்கூட முறையான மத மாற்றங்களுக்கு விதி முறைகள் இயற்றி நடைமுறைப்படுத்தவேண்டும்.

இந்தியா மதச் சார்பற்ற நாடு. ஆனால் இந்திய மக்கள் மதச்சார்பு உடையவர்கள். அவர்களுடைய வாழ்க்கைமுறை மதச்சார்புடையது என்பது முரண்பட்ட நிலை. ஒவ்வொரு இந்தியனும் மதச்சார்பற்றவனாக வாழ்தல் வேண்டும். மதச் சார்பற்ற தன்மை என்பது- மதம் இல்லாத வாழ்க்கையல்ல. மற்ற மதங்களையும் மதிப்போடு போற்றுதல் என்பதே மதச் சார்பற்ற தன்மைக்கு விளக்கம். இன்று இந்தியாவில் நடப்பதென்ன? மதத்தின் வழிப்பட்ட சட்டங்கள்- அரசியல்