பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசீர்வாதப் பேருரை

281



‘Saivism has a history going back to chalcolithic age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in this world.’

என்று சைவத்தின் பழமையைக் குறிப்பிடுகின்றார். இங்ஙனம், சைவம் காலத்தால் பழமையாகவும், உணர்ச்சியாலும் வளர்ச்சியாலும் நலங்கள் மல்கிப் புதுமையாகவும், காட்சி அளிக்கிறது.

சித்தாந்த சமயத்தைப் பற்றிய புகழுரைகள்

திருவாசகத்தில் ஈடுபட்டு அகம் குழைந்த அன்பராகிய போப்பையர் அவர்கள், சைவசித்தாந்தக் கொள்கை தமிழரது பேரறிவின் சிறந்த பயன் என்று பாராட்டுரை கூறியுள்ளார். கெளடி என்னும் பாதிரியாரும், சைவசித்தாந்தத்தின் சீர்மையைச் செப்பமுறக் கூறியுள்ளார். அவர் கூறுவதாவது, ‘சைவசித்தாந்தக் கொள்கை தொன்மை நலம் பல அமையப் பெற்றது’, என்பதாம்.

சமயக் கருத்துக்களில் மிகப் பழமையானவை யாவும், தென்னிந்தியாவின் இச்சமயத்திற்குத்தான் உரிமையுடையன. இதுவே தமிழினத்தாரின் பண்டைச் சமயமாகும். ஏனைய வெல்லாம் பின் வந்தனவாகவும், பிற சமயத்திற்குரியன வாகவும் காணப்படுகின்றன. அணிபெற அமைந்த சமயமாயும், நம்பிக்கைக்கும் நல்வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாகவும். இருப்பதில் சைவசித்தாந்தமே தென்னிந்தியாவில் உள்ள சமயங்கள் யாவற்றிலும் சிறந்ததாகும். இந்தியா முழுவதிலுங்கூட இந்தியரது நினைவின் சீர்மைக்கும் உயர்தர வாழ்க்கைக்கும் எல்லையாகும் பெருமை படைத்தது என்று கூறுதல் மிகுதியாகாது. நம் நாட்டு அருளாசிரியப் பெருமக்களும், சைவத்தின் சிறப்பினைப் பலபடப் பாராட்டிப் பேசியுள்ளனர். “சைவத்தின் மேற் சமயம் வேறில்லை” என்றும், “ராஜாங்கத்தமர்ந்து வைதீக சைவமே” என்றும்

கு.XII.19.