பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




6


மனம் ஒரு மாளிகை

பேரின்பம்


“தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே-ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!”

-திருஅருட்பா

தன்னை அறிதல் என்றால் என்ன? தன்னை அறிந்து கொள்வது எப்படி தன்னை அறிந்து கொள்வதால் பயன் உண்டா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்போமானால், கேட்டும் புலன் வழி போகாது திரிகரணங்களையும் அடக்கி நின்றோமானால் ஆங்கு-தன்னை யறிந்தின்பமுறுவது தானே சித்திக்கும்.

- “நான் யார்? என் ஞானங்கள் யார்?’ எனக் கேட்போமானால் தன்னை அறிந்து இன்பமுறலாம்,’ தன்னை அறிவது என்பது நம் மனத்துக்குள்ளேயேயிருக்கும் சோதியை (பரம்பொருளை) உணர்வது ஆகும். தன்னை அறிந்தால் பிறவியை ஒழித்துப் பேரின்பம் பெறலாம்.

தன்னையும் இன்னார், இனையன் என்று எண்ணாமலும் சிந்திக்காமலும் இருந்தும், அஞ்ஞானக்