பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோற்றத்தில் வேறுபாடுகள்! செயல் முறையில் பயன்படுவதில் ஒருமைப்பாடு; உயிர்க்குலத்தின் ஆக்கம், வாழ்வு இதுதானே உண்மை! உதவியென்ற அடிப்படையில் தான் வேளாண்மை நடைபெறுகிறது. தொழிலுலகம் செயற்படுகிறது.

ஆனால், காலப்போக்கில் உதவியென்ற இந்த மனப்பான்மை அருகி, நாட்டில் ஏழ்மையும் வறுமையும் வளர்ந்து விட்டன. இந்து சமூகத்தில் மிக அதிகமான மக்கள் வறுமையிலும், ஏழ்மையிலும் உழல்கின்றனர். இந்து சமூக மக்கள் மதமாற்றங்களுக்கு ஆளானதற்கு மிக முக்கியமான காரணம் வறுமையும், ஏழ்மையுமே எனபதை எளிதில் மறந்து விட முடியாது. இன்றும் ஓர் இந்துவுக்குச் சமய அடிப்படையில் சமூக அடிப்படையில் உத்தரவாதமில்லை என்ற மனவேதனை நிறைந்த உண்மையை நாம் உணர்ந்து, செயற்படும் நாளே இந்து சமூகத்தில் பொன்னாள்!

ஆதலால் ஒவ்வொரு இந்துவும், இந்து சமூகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உதவி செய்யும் மனப் பான்மையில் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உதவி இரக்கத்தின் அடிப்படையில் தோன்றுதல் கூடாது. உரிமை, கடமை என்ற அடிப்படையில் தோன்ற வேண்டும். இந்த உதவி அற உணர்ச்சியில் மட்டும் நடைபெறக் கூடாது. முறையான ஆக்க ரீதியான உதவியாக அமைய வேண்டும்.

ஆதலால், ஒவ்வொரு இந்துவும் தம்முடைய வருவாயில் ஒரு குறிப்பிட்ட நியாயமான விழுக்காட்டு நிதியைச் சமூகப் பாதுகாப்பு நிதிக்கு மனமுவந்து தர வேண்டும். அந்த நிதி இந்து சமூகத்தில் நலிந்தவர்களுடைய மேம்பாட்டுக்கு ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தப் பெறல் வேண்டும்.

இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வாழத்தக்க வகையில் வளர்க்கப் பெறுதல் வேண்டும். இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வாழத்